குமரியில் கோலாகலமாக தொடங்கியது நவராத்திரி விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில், நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது.

Update: 2021-10-06 14:30 GMT

நவராத்திரியை முன்னிட்டு, குமரியில் கொலு அமைத்து, சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி விழா அமைகிறது, அசுரர்களை அளித்து தேவர்களை காத்த பராசக்தியை போற்றும் வகையில் அமையும் இந்த நவராத்திரி விழாவில் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு அமைத்து கொண்டாடுவர். மேலும் நவராத்திரி நாளில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை போற்றும் வகையில், சரஸ்வதி பூஜையும் செய்யும் தொழிலை போற்றும் வகையில் ஆயுத பூஜையும் கொண்டாடப்படும்.

இதனிடையே,  நவராத்திரி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது. கோவில்கள் மற்றும் வீடுகளில் நவராத்திரி கொலு அமைத்த பொதுமக்கள் நவராத்திரி விழா வழிபாட்டை தொடங்கி உள்ளனர்.

நாகர்கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தொடங்கிய நவராத்திரி விழா கொலு வழிபாட்டில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News