மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் குறித்து அவதூறு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் குறித்து அவதூறு பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோவில் குறித்து சுவாமிதோப்பு அய்யா வைகுண்ட பதியை சேர்ந்த பாலபிரஜாதிபதி மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் மனநலம் பாதித்த கன்னிப்பெண்ணை அடக்கம் செய்த இடம் என்றும் குமரியில் இருசாரார் மட்டுமே பூர்வீக குடிகள் என்றும் கூறினார்.
ஏற்கனவே தீ விபத்து, அறநிலைய துறையின் செயல்பாடுகள் போன்றவற்றால் அதிருப்தி மற்றும் வேதனையில் இருக்கும் பக்தர்கள் மற்றும் இந்து இயக்கத்தினர் பாலபிராஜாதிபதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மத சண்டை மற்றும் ஜாதி சண்டையை உருவாக்கி சமுதாய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தில் பகவதி அம்மனின் சிறப்பை மழுங்கடிக்கும் நோக்கில் கூறப்பட்டது எனவும்.
மண்டைக்காடு பகவதி அம்மன் தரிசிக்கும் பக்தர்கள் தெய்வ பிரசன்னம் தேவை என்று கோரிக்கை வைக்கும் பொழுது அருள்வாக்கு சொல்ல படாத கோவிலில் அருள்வாக்கு பற்றி கூறுவது வேண்டும் என்றே மத நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது என்றும் கூறி இந்து இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இந்துக்களின் மனதை புண்படும் விதத்தில் பேசி சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் பாலபிரஜாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டு இந்து முன்னணி கோட்ட செயலாளர் சோமன் தலைமையில் இந்து இயக்கத்தினர் மாவட்ட எஸ்பியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.