கடல் அரிப்பால் முக்கிய சாலை சேதம்: 5 மீனவ கிராமங்கள் துண்டிப்பு
குமரியில் கடல் அரிப்பால் முக்கிய சாலை சேதம் அடைந்த நிலையில் 5 மீனவ கிராமங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை சாலை கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்து முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனால் கடற்கரை சாலை வழியாக 5 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் இயங்கி வந்த போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
மேலும் சாலை இடிந்து விழுந்ததால் பள்ளம் துறை, சங்குதுறை பீச் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் தொழிலுக்காக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மீனவர்கள் மன வேதனை அடைந்துள்ளனர்.