ஹிஜாப் அணிய கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை: குமரியில் மாணவ, மாணவிகள் போராட்டம்.

ஹிஜாப் அணிய கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை விதித்த விவகாரம் தொடர்பாக குமரியில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-03-21 12:30 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

பள்ளிகள் கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து சமீபத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை கண்டித்து கர்நாடகம் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் கலை கல்லூரியில் இன்று வகுப்பிற்கு வந்த மாணவ மாணவிகள் ஹிஜாப் அணிய நீதிமன்றம் தடை விதித்ததை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுப்புகளை புறக்கணித்த 300 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஹிஜாப் தீர்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பாதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News