நானும் ரவுடிதான்: குமரியில் மதுபோதையில் போலீசாரிடம் மல்லு கட்டிய குடிமகன்

நானும் ரவுடிதான் என குமரியில் குடி போதையில் போலீசாரிடம் மல்லு கட்டிய குடிமகனால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-03-31 14:00 GMT

குமரியில் குடி போதையில் போலீசாரிடம் மல்லு கட்டிய குடிமகன்.

கன்னியாகுமரி மாவட்டம் அண்ணா பேருந்து நிலையத்தில் காலை மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் அங்கு காவல்துறை அதிகாரிகளும், போலீசாரும் ரோந்து செல்வது வழக்கம்.

அவ்வாறு அங்கு காவல்துறை அதிகாரி ஒருவர் ரோந்து சென்றபோது, குடிபோதையில் காணப்பட்ட ஒருவர் ரகளையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அவரை எச்சரிக்கை செய்த காவல்துறை அதிகாரியிடம் போதை ஆசாமி மல்லு கட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர்கள் போதை ஆசாமியை சுற்றி வளைத்து நையப் புடைத்தனர்.

இதனை எதிர்கொள்ள முடியாத போதை ஆசாமி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தை அங்கு நின்று கொண்டிருந்த சில இளைஞர்கள் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News