காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு பேச்சு - சீமான் மீது காவல் நிலையத்தில் புகார்
காங்கிரஸ் தலைவர்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடவடிக்கை எடுக்க கூறி காவல் நிலையத்தில் புகார்.;
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் மேல்புறம் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் அருமனை காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில் காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் ராஜீவ் காந்திக்கு பிறந்தவர்களா, இவர்கள் எல்லாம் ஏதோ அவருடைய பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள் என்றும், சோனியா காந்தி சக்காளத்தி பிள்ளைகளா என்றும் மிக அவதூறான வார்த்தையைப் பயன்படுத்தி பேசியிருக்கிறார், எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.
சீமான் கட்சியை சேர்ந்தவர்கள் சுவரொட்டிகளில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் படத்தை அச்சிட்டு இளைஞர்களிடையே தீவிரவாதத்தை தூண்டும் விதத்தில் நடந்து வருகின்றனர் எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.