திமுக அரசை கண்டித்து குமரியில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து குமரியில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஆட்சியில் அமர்ந்த உடன் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்ததும் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாமல் செயல்படும் விடியல் அரசான திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் படி முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான பச்சைமால் கோணம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார், இதே போன்று குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதே போன்று நாகர்கோவில் மாநகர செயலாளர் சந்துரு, மாநகர அம்மா பேரவை செயலாளர் வேலாயுதம் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளின் முன் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.