வழக்குகளில் சட்ட வார்த்தைகள் மிக மிக முக்கியம் : சட்டக் கல்லூரி முன்னாள் பேராசிரியர்

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் தலைமையில் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2024-06-29 06:30 GMT

போக்ஸோ சட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றும் மதுரை சட்டக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சிவக்குமார்.

சட்டத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் முக்கியம் எனவும் குற்றத்தின் தன்மைகளை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் மதுரை சட்டக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன், லார்ஸ் அசோசியேசன் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், மாநில நீதித்துறை அகாடமி அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆய்வு வட்டம் சார்பில் , சிறுவர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) சட்டத்தின் சிறப்பு குறிப்புகள் கூடிய போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட நீதிபதி திரு யு.செம்மல் தலைமையில் நடைபெற்றது.

இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.இதில் சிறப்புரையாற்றிய முன்னாள் மதுரை சட்டக் கல்லூரி பேராசிரியரும் , வழக்கறிஞருமான சிவக்குமார் , குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் என்பது மிக முக்கியமானது எனவும் , அது பல்வேறு பரிமாணங்களில் மறுசீரமைக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வழக்கிலும் சட்டத்தின் வார்த்தைகள் என்பது மிக முக்கியமானது. குற்றத்தின் தன்மை கருத்தில் கொண்டு அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து கொண்டு அதன் மூலம் வழக்கு தொடரலாம்.

போக்ஸோ குற்றங்களை மறைத்தல் என்பது குற்றமாகும் உள்ளிட்ட பல்வேறு போக்ஸோ சட்ட விதிகள் குறித்து விரிவான விளக்க உரை அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ்சாம்ராஜ்துரை , வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் கண்ணன், சிவகோபு ,திருப்பதி முரளிகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் காவல் ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News