கள்ளக்குறிச்சி அருகே விளைநிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட மணி ஆற்றுப்படுகையில் முருகன் என்பவர் சொந்தமான விவசாய வயலில் மரவள்ளிக்கிழங்கு செடிக்கு இடையில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் மேற்படி வயலில் சோதனையிட்டபோது 7 கஞ்சா செடிகள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தியாகராஜபுரம், கிழக்குத்தெருவை சேர்ந்த ஐயாக்கண்ணு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்