கள்ளச்சாராயத்திற்கு 37 பேர் பலி: கண்ணீர் புரமாக மாறிய கருணாபுரம்

கள்ளச்சாராயத்திற்கு 37 பேர் பலியான கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீர் புரமாக மாறி உள்ளது.

Update: 2024-06-20 08:38 GMT

இறந்தவர்களின் உடல்களை பார்த்து அழும் பெண்கள்.

கள்ள சாராயத்திற்கு 37 பேர் பலியான கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கண்ணீர் புரமாக மாறி உள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றுதான் கள்ளக்குறிச்சி. இந்த மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட சில மாதங்களிலேயே தனியார் பள்ளி மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது .ஆனாலும் இந்த விவகாரத்தில் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றுவரை இருந்து வருகிறது

இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி மீண்டும் தமிழகத்தை மட்டும் இன்றி இந்திய அளவில் ஏன் உலக பார்வையை தன் பக்கம் இழுத்து உள்ளது. அதற்கு காரணம் நேற்று அந்த மாவட்டத்தின் கருணாபுரம் என்ற பகுதியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தான். கள்ளச்சாராயம்  குடித்தவர்கள் ஒன்று இரண்டு பேர் என முதலில் பலி செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் சாராயத்திற்கு பலியானவர்களின்  எண்ணிக்கை தற்போது 37 ஐ தாண்டி உள்ளது. இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே உயிர்ப்பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க கள்ளச்சாராய சம்பவத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் தான் கள்ள சாராயத்தை அதிக அளவில் குடித்து இறந்துள்ளனர். இதன் காரணமாக இறந்தவர்களின் உடல்கள் அவரவர் வீடுகளுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம் தந்தையை இழந்த குழந்தைகளின் அலறல்  கணவரை இழந்த மனைவிகளின் அலறல் எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கருணாபுரம் கண்ணீர் புரமாக மாறி உள்ளது. குழந்தைகளின் அழுகுரல் பெண்களின் கூக்குரல் என எங்கு பார்த்தாலும் கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீர் படலமாக காட்சி அளிக்கிறது.

Tags:    

Similar News