ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தை பைக் சாகசம், கார் பந்தயமாக பயன்படுத்தும் இளைஞர்கள்

Erode news- ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தை பைக் சாகசம் மற்றும் கார் பந்தய பயிற்சி மையமாக பயன்படுத்தும் இளைஞர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்சிகள் வைரலாகி வருகிறது.

Update: 2024-05-25 11:45 GMT

Erode news- ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் பைக் சாகசம் மற்றும் கார் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோக் காட்சிகள்.

Erode news, Erode news today- ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தை பைக் சாகசம் மற்றும் கார் பந்தய பயிற்சி மையமாக பயன்படுத்தும் இளைஞர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஈரோடு சோலார் பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் வாயிலாக கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தற்போது, பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இப்பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை இன்னும் தொடங்காத நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில இளைஞர்கள் பைக் சாகசம் மற்றும் கார் பந்தயம் ஓட்டி பழகியும், போட்டிகள் நடத்தி வருவதான வீடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராததால் தேவை இன்றி பிற பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதுவரையிலும், அந்தப் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News