16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.;

Update: 2022-09-22 11:30 GMT

பங்களாப்புதூர் காவல் நிலையம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி, 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு இடையில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் முனியப்பன் நகரை சேர்ந்த கருப்பன் மகன் இளங்கோவன் (22) என்பவர், அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

மேலும் இளங்கோவன், அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் பாலத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இளங்கோவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News