ஈரோட்டில் காரில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது: போலீசார் விசாரணை

ஈரோட்டில் காரில் கஞ்சா கடத்திய வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-08-19 12:45 GMT

பைல் படம் 

ஈரோடு கருங்கல்பாளை யம் போலீசார் நேற்று பவானி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட் டுக் கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் சாலையோரம் நின்றிருந்த கார் ஒன்று வேகமாக புறப்பட்டு சென்றது. போலீசார் காரை துரத்தி சென்று சுற்றி வளைத்து சோதனையிட்டனர்.

அப்போது காரில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பிடிபட்டவர் வீரப்பன்சத்திரம், அருள்வேலவன் நகரை சேர்ந்த மொய்தீன் மகன் முகமது ஆசிக்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது ஆசிக்கை கைது செய்தனர்.

Tags:    

Similar News