பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
அந்தியூர் அருகே பள்ளி மாணவியை காதலிக்குமாறு தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
கைது செய்யப்பட்ட விஜய்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சென்னம்பட்டி முரளியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் விஜய் (24), அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து, அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். மாணவியின் தந்தை, மகளை தொந்தரவு செய்தது குறித்து விஜயிடம் கேட்டபோது, அவரை அடித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் விஜயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.