சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு முகாம்
சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு மற்றும் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு முகாம் நேற்று (11ம் தேதி) நடைபெற்றது.;
முகாமில் மாணவிகளுக்கு உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார் வழங்கிய போது எடுத்த படம்.
சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு மற்றும் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு முகாம் நேற்று (11ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வட்டாரம் சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு காசநோய், தொழுநோய் ஒழிப்பு, உலக மக்கள் தொகை தினம், இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் உலக மக்கள் தொகை தின நோக்கம், மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாட்டு முறைகள், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் சமூக பிரச்சனைகள், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பெண் கல்வி பாதிப்புகள் அதனால் ஏற்படும் சமூக பின்னடைவுகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் பிரசவ கால தாய் சேய் மரணங்கள், கர்ப்பச்சிதைவுகள், குறை பிரசவங்கள், ஊட்டச்சத்து இல்லா குழந்தை பிறத்தல், இரத்தசோகை நோய் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், காசநோய் பரவும் விதம் நுரையீரல் காச நோயின் அறிகுறிகள், காச நோயின் வகைகள் அதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக கிடைக்கும் இடங்கள், தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகள், தொழு நோயினால் ஏற்படும் அங்கஹுனங்கள், தொழு நோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை இலவசமாக கிடைக்கும் இடங்கள் குறித்தும் சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் முருகபெருமாள், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் 270 பேர்கள் கலந்து கொண்டனர். மேலும், முகாமில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.