கோபி சிறுவலூரில் உலக சுற்றுச்சூழல் தின புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

Update: 2024-06-07 10:00 GMT

Erode news- சிறுவலூர் பொம்மநாயக்கன்பாளையத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Erode news, Erode news today- கோபி அருகே பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரம் சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அருண் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினம், புகையிலை எதிர்ப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் சுற்றுச்சூழல் பாதிப்பினால் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதிப்பில் மனிதனின் பங்கு, சுற்றுச்சூழல் பாதிப்பினால் பரவும் நோய்கள், நெகிழி பயன்பாடுகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் கொசு உற்பத்தி முறைகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நலக் குறைவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் மரண விகிதங்கள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


மேலும், இளம்வயது திருமணம் மற்றும் இளம்வயது கர்ப்பத்தால் ஏற்படும் சமூக மற்றும் உடல் நல பாதிப்புகள், அடிக்கடி குழந்தை பெற்றுக் கொள்வதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள், பெண்களுக்கு இளம் வயது திருமணத்தால் தடைப்படும் கல்வி பாதிப்புகள், பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தைச் சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் பிரகாசம், சேதுராமன் மற்றும் தொழிலாளர்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News