ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு முகாம்
ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு முகாம் நேற்று (1ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு முகாம் நேற்று (1ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சியில் ராஜாஜிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட 24வது வார்டு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காசநோய் மற்றும் உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம் அதன் பாதிப்புகள், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள், காச நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், உலக தாய்ப்பால் தினத்தின் நோக்கம், பிறந்த குழந்தைக்கு முதல் உணவாக தாய்ப்பால் புகட்டப்பட வேண்டியதின் அவசியம், தாய்ப்பாலில் உள்ள இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தாய்ப்பால் புகட்டும் முறைகள், வயிற்றுப்போக்கு நோயினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், இரு மாத கால வயிற்றுப்போக்கு தடுப்பு திட்டத்தின் நோக்கம், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் பயன்கள், குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க வேண்டியதின் அவசியம், வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள், குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர் சரவணன், நடமாடும் ஊர்தி குழுவினர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் ,ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மைய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 90 பேர்கள் கலந்து கொண்டனர்.