அந்தியூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது

அந்தியூர் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.;

Update: 2022-06-19 03:30 GMT

கைது செய்யப்பட்ட சிவசக்தி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காளியப்பா வீதியைச் சேர்ந்தவர் சிவசக்தி (வயது24). கூலி தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு அக்டோபரில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி கர்ப்பம் ஆனதை யடுத்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அப்போது இது குறித்து மருத்துவர்கள் புகார் அளித்தனர்.இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் விசாரணை நடத்தி, பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவ சக்தி மீது புகார் அளித்தனர்.இதனையடுத்து, போலீசார் கடந்த ஏப்ரல் 25ம் தேதி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவசக்தியை தேடிவந்தனர்.இந்த நிலையில் 55 நாட்களுக்கு பிறகு நேற்று அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே சிவசக்தியை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News