ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
Erode news- ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;
Erode news- கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் எடுக்கப்பட்ட படம்.
Erode news, Erode news today- ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு அடுத்த திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் கொங்கு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார்.
கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மஞ்சு வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ராஜேந்திரா கல்வி நிறுவனங்களின் முதல்வர் ராதா மனோகரன் கலந்து கொண்டார்.
பின்னர், கல்வியானது பெண்களுக்கு தன்னம்பிக்கை தரவல்லது என்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு குறித்தும் சிந்தனைச் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சுயமரியாதை ஆகியவை பெண்களுக்கு மிக முக்கியமானவை என்றும் அவர் சிறப்புரை ஆற்றினார். விழாவின், முடிவில் ஆங்கிலத் துறை மாணவி ஸ்வேதா நன்றியுரை ஆற்றினார்.