எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா..!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-08 14:15 GMT

எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா.

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு மையம் மற்றும் இன்னர் வீல் கிளப் ஆப் ஈரோடு காஸ்மாஸ் ஆகியோர்கள் சார்பில் கல்லூரியின் பெண் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளுக்கான உலக மகளிர் தின விழா கல்லூரி வளாகத்தில் உள்ள சுத்தானந்தன் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, கல்லூரியின் தாளாளர் "பாரத் வித்யா சிரோமணி" டாக்டர். வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கி பேசுகையில் பெண்களின் ஒழுக்கம், துணிவு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றைப் பற்றி விரிவாகக் கூறினார்.

சிறப்பு விருந்தினர்களாக சேலம் கே.கே.டி.ஆர். அசோசியேட்ஸ் கட்டிடக்கலை நிபுணர் துர்காதேவி கலந்து கொண்டு மாணவிகளுக்கு மத்தியில் பேசுகையில் படிப்பு, நோய் இன்றி வாழும் வாழ்க்கை, ஆசிரியர்களை மதித்தல், தன்னை எவ்விதம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாகக் கூறினார்.

மேலும், சிறப்பு விருந்தினர் திருமதி. பாரதி சிவக்குமார், தரவு மேலாண்மை மற்றும் நிர்வாக நிபுணர், அசென்சர் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை அவர்கள் பேசுகையில் தயக்கம் இன்றி பேசுதல், நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தல், தன் தனித்தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல், விமர்சனங்களை எதிர்நோக்குதல், இறை நம்பிக்கை போன்றவற்றைப் பற்றி விளக்கிக் கூறினார்.

இவ்விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறை பெண் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்டிடவியல் துறைத் தலைவர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

செய்தியின் சுருக்க அமைப்பு 

சென்னிமலை எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா: பெண்களின் சாதனை கொண்டாடப்பட்டது

சென்னிமலை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு மையம் மற்றும் இன்னர் வீல் கிளப் ஆப் ஈரோடு காஸ்மாஸ் ஆகியோர்கள் இணைந்து உலக மகளிர் தின விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

கல்லூரி வளாகத்தில் உள்ள சுத்தானந்தன் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, கல்லூரியின் தாளாளர் "பாரத் வித்யா சிரோமணி" டாக்டர். வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கினார்.

பெண்களின் சாதனைகள் போற்றப்பட்டன

தலைமை உரையில் டாக்டர். வசந்தா சுத்தானந்தன், பெண்களின் ஒழுக்கம், துணிவு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்ற பண்புகளை வலியுறுத்தி பேசினார். மேலும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களின் வாழ்க்கை வரலாறுகளை சுட்டிக்காட்டி, மாணவிகளுக்கு ஊக்கம் அளித்தார்.

சிறப்பு விருந்தினர்கள் உரை

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் கே.கே.டி.ஆர். அசோசியேட்ஸ் கட்டிடக்கலை நிபுணர் துர்காதேவி, தரவு மேலாண்மை மற்றும் நிர்வாக நிபுணர் திருமதி. பாரதி சிவக்குமார் (அசென்சர் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை) ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News