கோபிசெட்டிப்பாளையம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-11-05 14:30 GMT

கோபி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெரியகொடிவேரி சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.

கோபிசெட்டிப்பாளையம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள பெரியகொடிவேரி சென்றாயம்பாளையத்தைச் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். நத்தம் அரசு புறம் போக்கு நிலத்தில் கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த பகுதி மக்கள் அங்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியில் வெளியூரைச் சேர்ந்த சிலர் சாலையை வழிமறித்து ஆக்கிரமிப்பு செய்து குடிசைகள் அமைத்து உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர். இதையடுத்து பெரியகொடிவேரி சென்றாயம்பாளையத்தைச் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் கோபி சார் ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டனர்.

இதை தொடர்ந்து அவர்கள் அத்துமீறி செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோபி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News