ஈரோட்டில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்

ஈரோட்டில் முறையாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2024-06-06 04:15 GMT

காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

ஈரோட்டில் குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 44வது வார்டு பழைய பூந்துறை ரோடு ஓடை பள்ளத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீரானது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில்,  கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் இடம் பல முறை புகார் அளித்து உள்ளனர். புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஈரோடு காந்திஜி சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஈரோடு காந்திஜி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து களைந்து சென்றனர். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News