Erode Rain Update: ஈரோடு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை
ஈரோடு மாவட்டத்தில் திங்கட்கிழமை (நேற்று) காலை முதலே அநேக இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது.;
ஈரோடு மாவட்டத்தில் திங்கட்கிழமை (நேற்று) காலை முதலே அநேக இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்யும் வகையில் தினசரி பகல் முழுவதும் வெயிலின்றி மேக மூட்டம் தொடர்ந்தது. காலை முதல் மாலை வரை பகல் நேரங்களில் மேக மூட்டம் சூழ்ந்தது. ஆனால், மழை பெய்யவில்லை. இதனால், கடுங்குளிரால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பகலில் வெயிலின்றி வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அநேக இடங்களில் பலத்த மழையாகவும், சாரல் மழையாகவும் பெய்து வருகிறது.
மாவட்டத்தில் திங்கட்கிழமை (ஜன.8) நேற்று காலை 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஜன.9) இன்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
மொடக்குறிச்சி - 2.00 மி.மீ ,
கொடுமுடி - 32.00 மி.மீ ,
சென்னிமலை - 9.00 மி.மீ ,
பவானி - 1.80 மி.மீ ,
அம்மாபேட்டை - 3.20 மி.மீ ,
வரட்டுப்பள்ளம் - 6.00 மி.மீ ,
குண்டேரிப்பள்ளம் - 2.20 மி.மீ ,
பவானிசாகர் - 1.00 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 57.20 மி.மீ ஆகவும், சராசரியாக 3.36 மி.மீ ஆகவும் மழையளவு பதிவாகி உள்ளது.