அந்தியூர் குப்பாண்டம்பாளையம் மனுநீதி நாள் முகாமில் 185 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் இன்று (24ம் தேதி) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 185 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

Update: 2024-10-24 11:00 GMT

Erode news- குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம். உடன் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Erode news, Erode news today- அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் இன்று (24ம் தேதி) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 185 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் அத்தாணி உள்வட்டம் குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று (24ம் தேதி) நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்து, 185 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


பின்னர் அவர் தெரிவித்ததாவது, இம்மனுநீதி நாள் முகாமில் அரசு துறைகளின் சார்பில் பல்வேறு கருத்து காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடைத் துறை, வேளாண்மை உழவர் நலத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மகளிர் சுய உதவிக்குழு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார்.


தொடர்ந்து, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அவர் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இம்முகாமில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், உதவி இயக்குநர்கள் உமாசங்கர் (ஊராட்சிகள்), சக்திவேல் (பேரூராட்சிகள்), துணை இயக்குநர் (வேளாண்மை) சாந்தாமணி, அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர்‌ சக்தி கிருஷ்ணன், குப்பாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) பூங்கோதை, அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News