பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக இன்று (15ம் தேதி) முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு அளித்துள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக இன்று (15ம் தேதி) முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2024-25-ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் நன்செய் பாசனத்திற்கு இன்று (15ம் தேதி) வியாழக்கிழமை முதல் 12.12.2024 முடிய 120 நாட்களுக்கு 23.846,40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபி, நம்பியூர், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களில் உள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் உள்ள நிலங்களும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள நிலங்களும் என ஆக மொத்தம் லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.