பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 138 கன‌ அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (மே.,28) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 138 கன‌ அடியாக சரிந்தது.;

Update: 2023-05-28 05:15 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்கள் வழியாக சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இதற்கிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு வரும் நீர் வரத்து 150 கன அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

அதன்படி, இன்று (மே.,28) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:- 

நீர் மட்டம் - 82.19 அடி ,

நீர் இருப்பு - 16.87 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 138 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 197 கன அடி) ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 1,055 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 5 கன அடி நீரும், அரக்கன்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 900 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 150 கன அடி நீரும் என் மொத்தம் 1,055 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

மேலும், பவானி அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை. 

Tags:    

Similar News