பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் வாக்களிக்க அனுமதிக்க கூடாது: அதிமுக மனு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்று ஈரோடு அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் எம்பி செல்வகுமார சின்னையன் கூறினார்.
வரும் பிப்ரவரி 27ல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்று ஈரோடு அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் எம்பி செல்வகுமார சின்னையன் கூறினார் . அவர் இது சம்பந்தமாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமாரிடம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தலை நேர்மையாக நடத்திட வேண்டும். வாக்காளர்கள் பூத் சிலிப் உடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை கொண்டு வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேர்தல் தேதிக்கு 15 நாட்கள் முன்பே பூத் சிலிப் வழங்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அனுமதி பெற்ற அலுவலர்கள் மட்டுமே பூத் சிலிப்பை வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். மற்ற தனி நபரிடமும் அல்லது கட்சியிடமும் வழங்க கூடாது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பூத் சிலிப் வழங்கும் அதிகாரிகள் கட்டாயமாக இருக்க வேண்டும். இந்த அலுவலர்கள் விடுபட்டுப் போன வாக்காளர்கள் பூத் சிலிப் கேட்கும் பொழுதுவாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே வழங்க வேண்டும். ஒருவருக்கு ஒரு பூத் சிலிப் மட்டுமே வழங்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பூத் சிலிப் வழங்கக் கூடாது. இதே போன்று ரயில்வே காலனி சம்பத் நகர் பகுதிகளில் இருந்தவர்கள் பலர் வேறு இடம் குடி பெயர்ந்துள்ளனர். அவர்களைக் கண்டறிந்துஅவர்களுக்கும் பூத்ஸ்லிப் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.