திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை..!
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாளை (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாளை (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்தது.நாளை (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்த இயந்திரங்கள் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி அரசு கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அங்கு வாக்கு எண்ணும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
இந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கைக்காக 6 வாக்கு எண்ணிக்கை மையமும், ஒரு தபால் வாக்கு எண்ணும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. தலா 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தபால் வாக்கு எண்ண 8 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைகளுக்கும் தனியே வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 92 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 1,745 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிக வாக்குச்சாவடி இருப்பதால் 28 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதேபோல், திருப்பூர் தெற்கு தொகுதியில் 18 சுற்றுகளும், கோபி தொகுதியில் 22 சுற்றுகளும், பவானி தொகுதியில் 21 சுற்றுகளும், பெருந்துறை மற்றும் அந்தியூர் தொகுதியில் தலா, 19 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தபால் ஓட்டு எண்ணிக்கை 2 சுற்றுகளாகவும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.