கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

Erode News- மயானத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோபி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25ம் தேதி) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-25 06:45 GMT

Erode News-கோபி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Erode News, Erode News Today- மயானத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோபி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25ம் தேதி) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சி காமராஜபுரம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.


இப்பகுதி மக்கள் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானத்தை அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் உடல்களை புதைக்க அனுமதிக்காமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மயானத்தை ஆக்கிரமித்துள்ள தனிநபர் தனது குடும்பத்தினருடன் இணைந்து மயானம் முழுவதையும், இயந்திரங்களின் உதவியோடு தரைமட்டமாக்கி இடித்து அங்கிருத்த சமாதிகளை சேதப்படுத்தியுள்ளனர்.


இதனால், ஆத்திரமடைந்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் மயானத்தை சேதப்படுத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி கோபி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்களின் மயானத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாப்பாக பயன்படுத்திட வேண்டும். வருவாய்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமியிடம் வழங்கினர். பின்னர், தொடர்ந்து அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News