கோபி, அந்தியூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், அந்தியூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-09-09 13:45 GMT

கோபி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம், அந்தியூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து இன்று (9ம் தேதி) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 08.01.2024-ல் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு பிற மாநிலங்களைப் போல கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு உரிய தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதேபோல், அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஈரோடு மாவட்ட பொருளாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். இதில், அந்தியூர் வட்ட செயலாளர் வீரமுத்து, வட்ட பொருளாளர் சந்தோஷ்குமார் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராம் நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News