அந்தியூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.;
கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சதீஸ்குமார் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது உறுதியானது.
இதனையடுத்து, எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.