ஈரோட்டில் நாளை பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்த காணொலிக் கூட்டம்
ஈரோட்டில் நாளை (2ம் தேதி) பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்த காணொலிக் கூட்டம் ஈரோட்டில் நாளை நடைபெற உள்ளது.
ஈரோட்டில் நாளை (2ம் தேதி) பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்த காணொலிக் கூட்டம் நடைபெறுவதால் பள்ளிகள், கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான நிகழ்வுகளை தடுத்து நிறுத்துதல் மற்றும் கையாளுதல் தொடர்பான கூட்டம் தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் காணொலி வாயிலாக நடத்தப்படவுள்ளது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கலை மற்றும் அறிவியில், பொறியியல், மேலாண்மை, சட்டம், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் அனைத்து தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நாளை (2ம் தேதி) மாலை 3 மணிக்கு வந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் நடத்தப்படும் காணொலிக் காட்சி கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.