ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி வேள்வி பூஜை

Erode news- ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை வேண்டி மற்றும் மக்கள் நலம் வேண்டி வேள்வி பூஜை நடைபெற்றது.

Update: 2024-05-10 12:15 GMT

Erode news- வேள்வி பூஜையின் போது எடுத்த படம்.

Erode news, Erode news today- ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை வேண்டி மற்றும் மக்கள் நலம் வேண்டி வேள்வி பூஜை நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அம்மா பங்காரு அடிகளாருக்கு புகழேந்தல் மற்றும் தொண்டாஞ்சலி நிகழ்வை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் மழை வேண்டி மக்கள் நலம் வேண்டி இயற்கை தெய்வ வழிபாடு வேள்வி மற்றும் அன்னமிடுதல் விழா மாவட்டம் முழுவதும் 555 இடங்களில் நடைபெற்றது.

இதன் துவக்க விழா நிகழ்ச்சி ஈரோடு குமாரசாமி வீதியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகம் குருபீடத்தில் துவங்கியது. விழாவினை மாவட்ட தலைவர் நடராஜன், பொருளாளர் இளங்கோ, கனகராஜ், ஆறுச்சாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

விழாவில் மாவட்டத்தின் துணைத்தலைவர்கள் சக்திவேல், செல்வகுமார், கனகராஜ், மினிசாமி மற்றும் செயலாளர்கள் செல்வம், வெங்கடசெல்வன், பால தண்டபாணி, ஜெகதீசன், தமிழ்நாடு முன்னாள் தலைவர் ராமசாமி, சத்திய நாதன் உள்பட அனைத்து நிர்வாகிகளும், செவ்வாடை தொண்டர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இதனையடுத்து, இந்த யாக பூஜையும், அன்னதானமும் ஈரோடு மாவட்டத்தில் பவானி, சத்தியமங்கலம், கோபி, அந்தியூர், பெருந்துறை, நம்பியூர், புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர், மொடக்குறிச்சி, அறச்சலூர், சிவகிரி மற்றும் ஈரோடு பகுதியில் சூரம்பட்டி பெரியார் நகர் உட்பட பல இடங்களில் நடந்தது.

Tags:    

Similar News