மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெள்ளோடு அணி சாதனை
Erode news- திருப்பூர் படியூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெள்ளோடு அணி சாதனை படைத்தது.;
Erode news, Erode news today- திருப்பூர் படியூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெள்ளோடு அணி சாதனை படைத்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழன் மிக்ஸ் மார்சியல் ஆர்ட்ஸ் மாநில அளவிலான போட்டி 2024-ம் ஆண்டுக்கான சிலம்பம், காரத்தே குங்ஃபு, யோகா உள்ளிட்ட தற்காப்பு கலை போட்டிகளை திருப்பூர் ஒலிம்பியா டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அகடாமி திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணியும் இணைந்து படியூரில் உள்ள மாரியம்மன் திருமண மாஹாலில் நடத்தியது.
போட்டிகளில் திருப்பூர் உட்பட, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சிலம்பத்தில் இரட்டைகம்பு மற்றும் தொடுமுறை போட்டிகளில் பங்கு பெற்று தங்களது தனிதிறமைகளை பயன்படுத்தி வெள்ளோடு சிலம்பம் அணி மாணவர்கள் முதலிடங்களில் 3 பேர் முறையே ஸ்ரீஸ், கந்தசாமி, திவ்யாபாரதி, 2-ம் இடங்களில் சுகன்விகாஸ், திருமுகிலன், பிரணீசன் மற்றும் மோசிகா ஆகியோர்கள் தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்று ஓவர்ஆல் சாம்பியன்ஜிப் முறையில் மூன்றாவது அணியாக வெள்ளோடு சிலம்பம் அணிக்கு பெருமைகள் சேர்த்துள்ளனர்.
இச்சாதனை படைத்த மாணவர்களையும், தாய்மண் சிலம்பம் மாஸ்டர் மணிமாறன், ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், மூத்த சிலம்பம் ஆசான் சரவணமுத்து, ஒலிம்பியா டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அகடாமி மணிகண்டபிரபு, படியூர் ஊர்த்தலைவர் மற்றும் பெற்றோர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.