பாசன வசதிக்காக வரட்டுப்பள்ளம் அணை இன்று திறப்பு
பாசன வசதிக்காக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை, இன்று திறக்கப்படுகிறது.;
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு, இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு, ஜூன்.17-ம் தேதி வரையில் 108 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
முதல் ஐந்து நாள்களுக்கு கிளை வாய்க்காலில் விநாடிக்கு 21 கன அடி தண்ணீரும், இரண்டாவது கிளை வாய்க்காலில் அடுத்த ஐந்து நாள்களுக்கு 16 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மொத்தம் 100 நாள்களுக்கு திறக்கப்படும் தண்ணீரால் 2,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதன் மூலம், விவசாயிகள் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யலாம்.33 அடி உயரமுள்ள வரட்டுப்பள்ளம் அணையில், தற்போது 32.78 அடி உயரத்துக்கு, 133 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.