காரை அகற்றாமல் அவசர கதியில் தார் சாலை அமைப்பு: பொதுமக்கள் அதிருப்தி
ஈரோட்டில் சாலையில் நிறுத்தியிருந்த காரை அகற்றாமல் அவசர கதியில் தார் சாலை போடப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் சாலையில் நிறுத்தியிருந்த காரை அகற்றாமல் அவசர கதியில் தார் சாலை போடப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில் கடந்த (26ம் தேதி) வெள்ளிக்கிழமை புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது, அங்குள்ள வீட்டின் முன்பு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரை அகற்றாமல் அவசர கதியில் சாலை அமைத்துள்ளதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஈரோடு மாநகராட்சி சார்பில் தார் சாலை அமைக்கும் பணி தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வாகனங்களை அகற்றிய பின்னர் சாலை அமைக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் உரிய தகவல்களைத் தெரிவிக்காமல் இரவு நேரங்களில் வந்து அவசர கதியில் தார் சாலை அமைத்துச் செல்கின்றனர். எனவே, காரை அகற்றாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்றனர்.