மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநிலப் பொதுக்குழுவில் வலியுறுத்தல்

Erode news- தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக பேசிவரும் மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2024-05-26 12:00 GMT

Erode news- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக பேசிவரும் மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 24வது மாநிலப் பொதுக்குழுவில் ஈரோடு - பவானி சாலையில் ஆர்.என்.புதூரில் உள்ள பிளாட்டினம் மஹாலில் மேலாண்மை குழுத்தலைவர் சம்சுல்லுஹாஹ் ரஹ்மானி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநிலப் பொதுக்குழுவிற்கு, மாநிலத் தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் அப்துல் கரீம், மாநிலப்பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழுவில் அமைப்புத் தேர்தலில் பழைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்பொதுக்குழுவில் அமைப்பின் தற்போதைய செயல்பாடுகள், அடுத்த கட்ட முன்னெடுப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இரத்த தானம், வெள்ள மீட்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை சிறப்பான முறையில் தொடர்ந்து செய்து வரும் மாவட்டங்களை ஆர்வமூட்டும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதுவரை நடந்து முடிந்துள்ள 6 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிடுவதில் கால தாமதம், முன்னர் வெளியிட்ட சதவீதத்திற்கு மாற்றமாக சுமார் ஒரு கோடி வாக்குகள் அதிகமாக வெளியிட்டுள்ள மர்மமாக உள்ளது என்பதுடன், 17சி படிவத்தை வெளியிட மறுப்பு, ஒப்புகை சீட்டு எண்ணுவதை மறுப்பது என தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பெரும் சந்தேகத்தை எழுப்பக்கூடியதாக உள்ளன.

மக்களின் சந்தேகத்தை தீர்க்க இவிஎம்-ல் பதிவான ஒட்டு மற்றும் ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையை ஒப்பிட்டு உறுதிப்படுத்திய பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என இப்பொதுக்குழுவின் வாயிலாக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தபட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக மத, இன, பிராந்திய வெறுப்பை விதைக்கும் வகையில் பேசி வரும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை இந்த மாநிலப்பொதுக்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

காஸா மண்ணில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை கடும் வேதனையேற்படுத்துகிறது. அந்த மண்ணில் நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்தபட்டது. போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் மண்ணில் கால் வைத்தால் கைது செய்யப்படுவார் என அறிவித்த ஜெர்மனிக்கும், பாலஸ்தீனத்தை முழு நாடாக அங்கிகரித்துள்ள ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கும் இந்த பொதுக்குழுவின் வாயிலாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என இப்பொதுக்குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News