அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
வெள்ளித்திருப்பூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் அடுத்த கோவிலூர் நல்லம்மாள் தோட்டம் அருகே உள்ள பள்ளத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மணல் கடத்துவதாக தனிப்பிரிவு போலீசார் தேவராஜன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் திருட்டுத்தனமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட, ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளியூரை சேர்ந்த சின்ராஜ் 45, மற்றும் ஆப்பக்கூடல் அருகே உள்ள மல்லியூரை சேர்ந்த சின்னச்சாமி 36 ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து வெள்ளித்திருப்பூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.