சத்தியமங்கலம் அருகே மணல் மூட்டை கடத்திய இரண்டு பேர் கைது

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகள் கடத்தி சென்று பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-29 16:00 GMT

கைது செய்யப்பட்ட சிவக்குமார், முருகேசன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செம்படாபாளைம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகள் கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் செம்படாபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த இரண்டு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார், முருகேசன் என்பதும் பவானி ஆற்றில் உள்ள மணலை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 1 லோடு டிராக்டர் அளவு கொண்ட மணலை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News