அந்தியூர் அருகே இரு கன்றுகள் ஈன்ற பசு
அந்தியூர் அருகே விவசாயி வளர்த்து வந்த கலப்பின பசு, இரு கன்றுகளை ஈன்றதை, அப்பகுதியினர் வியப்புடன் பார்த்து சென்றனர்.;
இரு கன்றுகளை என்ற பசுவுடன் செலம்பண்ணன்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த எண்ணமலங்கலம், கோவிலூரைச் சேர்ந்தவர் செலம்பண்ணன் (51). விவசாயி. இவர், தனது தோட்டத்தில் 5 கலப்பின பசுக்களை வளர்த்து வருகிறார்.
இதில், ஒரு பசுவானது, திங்கள்கிழமை இரவு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டும் பெண் கன்றுகள். இதனை அப்பகுதியினர் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.