ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
Erode News- ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (5ம் தேதி) நடைபெற்றது.
Erode News, Erode News Today- ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (5ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சியில் காயிதே மில்லத் நகர் பகுதியில் பி.பெ.அக்ரஹாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட நான்காம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் மற்றும் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள்,காச நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயின் பாதிப்புகள், சர்க்கரை நோய்க்கான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி முறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பயனாளிகள் 4 பேர்களுக்கு சிகிச்சை மருந்து பெட்டிகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து, காசநோய் அறிகுறி சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு நுண்கதிர் பட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் கார்த்திபன், மாமன்ற உறுப்பினர் சபீரா பேகம் முத்து பாவா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், வினோத்குமார், தொற்றாநோய்கள் பிரிவு செவிலியர் நீதி தேவன்,ஈரோடு மாவட்ட காசநோய் மைய நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் 100 பேர்கள் கலந்து கொண்டனர்.