பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் தரிசனம்..!

ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் இன்று (8ம் தேதி) காலை சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-07-08 12:15 GMT

திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த போது எடுத்த படம்.

Erode Today News, Erode News - பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் இன்று (8ம் தேதி) காலை சுவாமி தரிசனம் செய்தனர்.

கேரளா மாநிலம் திருவாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்தை சேர்ந்தவர் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமி பாய் (வயது 79). ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் இன்று (8ம் தேதி) வந்தார்.

அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமி பாய்க்கு பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் பவானி நகர மக்களின் சார்பாக ஜமுக்காளத்தை கொடுத்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, பவானியின் சிறப்பம்சங்கள் மற்றும் வரலாறுகளை கூறினார். இதனையடுத்து, அவர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, கோவில் ஆணையர் சுவாமிநாதன், கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாரண வீரன், இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் ஆகியோர் உடனிருந்தனர்.

புனித நகரமாம் காசியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமத்தில்’ மூழ்கி எழுந்தால், செய்த பாவங்கள் விலகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தென்னகத்தின் காசி என்று போற்றப்படும் பவானி கூடுதுறையில், காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் கூடுமிடம் ‘தட்சிணப் பிரயாகை’ என்றழைக்கப்படுகிறது. கூடுதுறையில் மூழ்கி எழுந்து, சங்கமேஸ்வரரை வழிபட்டு, தோஷங்களை நீக்குவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நாடிவரும் இடமாக உள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி நகரம். 

Tags:    

Similar News