ஈரோடு மாவட்டத்தில் 42 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 42 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-08-13 02:00 GMT

காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்.

ஈரோடு மாவட்டத்தில் 42 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர்கள் 42 பேரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த ராஜ சுலோச்சனா கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், பழனிசாமி கடம்பூர் காவல் நிலையத்துக்கும், பெருந்துறை காவல் உதவி ஆய்வாளர் அமரேஸ்வரன் கவுந்தப்பாடி நெடுஞ்சாலை ரோந்துக்கும், கடத்தூர் காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி ஈரோடு நகர காவல் நிலையத்துக்கும், கோபி அனைத்து மகளிர் காவல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கஜலட்சுமி பவானி காவல் நிலையத்துக்கும், வரப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் கோபி காவல் நிலையத்துக்கும்,

வெள்ளோடு காவல் உதவி ஆய்வாளர் கோபால் அந்தியூர் காவல் நிலையத்துக்கும், பவானி காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் தனபால் பவானிசாகர் காவல் நிலையத்துக்கும், கவுந்தப்பாடி காவல் உதவி ஆய்வாளர் சோபியா கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், கோபி காவல் உதவி ஆய்வாளர் பழனிசாமி அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கும், கோபி அனைத்து மகளிர் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் புஷ்பா பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், ஆப்பக்கூடல் காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ரோந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 சென்னிமலை காவல் உதவி ஆய்வாளர்  பிரியா ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவுக்கும், பவானி அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் கல்யாணி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், ஈரோடு சூரம்பட்டி காவல் உதவி ஆய்வாளர்  தமிழ்செல்வி கொடுமுடி காவல் நிலையத்துக்கும், அந்தியூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்  அமுதா ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கும், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பகவதியம்மாள் பவானி காவல் நிலையத்துக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல்,  நம்பியூர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் சித்தோடுக்கும், சூரம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் தாமோதரன் மொடக்குறிச்சிக்கும், வீரப்பன்சத்தினம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் திங்களூருக்கும், வீரப்பன்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் அந்தியூருக்கும், பெருந்துறை நெடுஞ்சாலை ரோந்து வாசு சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு, ஈரோடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள்  மாதேஸ்வரன் ஈரோடு தாலுகா காவல் நிலையத்துக்கும், கோபால் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்துக்கும், சந்திரசேகரன் ஈரோடு நகர காவல் நிலையத்துக்கும், ராஜேந்திரன் கடத்தூர் காவல் நிலையத்துக்கும், குமனவேந்தன் ஆசனூர் காவல் நிலையத்துக்கும், சரவணன் சென்னிமலை காவல் நிலையத்துக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும், ஈரோடு ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் தனபால் சுந்தர்ராஜன் நக்சல் தடுப்பு பிரிவுக்கும், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்துக்கு, வரப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் கோபி காவல் நிலையத்துக்கு, கருங்கல்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் பங்களாபுதூர் காவல் நிலையத்துக்கும், பவானி காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்துக்கும், அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளர் அருள்சாமி வெள்ளோடு காவல் நிலையத்துக்கு, கருங்கல்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் நடராஜன் மலையம்பாளையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் மொத்தம் 42 பேர் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News