ஈரோடு மாவட்டத்தில் 4 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-08-16 00:30 GMT

தமிழ்நாடு காவல்துறை (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 4 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஜெய்சிங் கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், ஈரோடு மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டைக்கும், பவானி காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவுக்கும், கோபி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஈரோடு மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல், திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் கோபிசெட்டிபாளையம் காவல் துணை கண்காணிப்பாளராகவும், திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய முத்துகுமரன் ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளராகவும், நெல்லை மாநகர் குற்ற பதிவேடுகள் பிரிவு துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் பவானி காவல் துணை கண்காணிப்பாளராவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News