ஈரோடு: தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

Erode news- ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது.;

Update: 2024-03-21 12:15 GMT

Erode news- மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல், 2024-ஐ முன்னிட்டு தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு, மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு நாளன்று பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களில் 2,666 முதன்மை அலுவலர்களும், 2,666 முதல் நிலை அலுவலர்களும், 2,666 இரண்டாம் நிலை அலுவலர்களும், 2,666 மூன்றாம் நிலை அலுவலர்களும், 306 நான்காம் நிலை அலுவலர்களும் என மொத்தம் 10,970 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

இந்த வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில், தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான அறிவுரைகள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் / வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள், பாதுகாப்பு அலுவலரின் பணிகள், வாக்குச் சாவடித் தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறை, வாக்குப்பதிவிற்கு முன்தினம் செய்யப்பட வேண்டியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், வாக்குச்சாவடிக்கு வெளியே மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள், வாக்குப்பதிவு முகவர்களுக்கான குறிப்புகள், வாக்குச்சாவடி அமைக்கப்படும் முறை, வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டியவை, ஒத்திகை வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு தொடங்கியவுடன் செய்ய வேண்டியவை, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொதுவாக நிகழக்கூடிய குறைபாடுகளும் அவற்றை சரிசெய்யும் முறைகள் உள்ளிட்டவை குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியின் போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜ் (வளர்ச்சி), ரமேஷ் (சத்துணவு) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News