கோபி அருகே பரிதாபம்: தீக்குளித்து பயிற்சி செவிலியர் தற்கொலை
Erode News- ஈரோடு மாவட்டம் கோபி அருகே வயிற்று வலியால் பயிற்சி செவிலியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
Erode News, Erode News Today- கோபி அருகே வயிற்று வலியால் பயிற்சி செவிலியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் எம்ஜிஆர் நகர் அர்ஜூனா காலனியைச் சேர்ந்தவர் கருப்பன் என்கிற கரண் (வயது 61). இவரது மகள் சூரியபிரபா (வயது 21). இவர் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு, கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த நிலையில் சூரியபிரபா இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (18ம் தேதி) காலை சூரியபிரபா பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், பணிக்கு செல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்து வீட்டின் உட்புறம் தாளிட்டுக் கொண்டார்.
பின்னர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில், சூரியபிரபாவின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூரியபிரபா ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூரிய பிரபாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.