ஈரோட்டில் ஜூலை 14ல் போதைக்கு எதிரான வணிகர்களின் தொடர் ஓட்டப் போட்டி

ஈரோட்டில் போதை கலாச்சாரத்துக்கு எதிரான வணிகர்களின் தொடர் ஓட்டப் போட்டி வருகிற ஜூலை 14ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2024-06-07 12:00 GMT

போதை கலாச்சாரத்துக்கு எதிரான தமிழிக வணிகர் ஒற்றுமை தொடர் ஓட்டம்.

ஈரோட்டில் போதை கலாச்சாரத்துக்கு எதிரான வணிகர்களின் தொடர் ஓட்டப் போட்டி வருகிற ஜூலை 14ம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகின்ற ஜூலை 14ம் தேதி காலை 6 மணிக்கு ஈரோடு வில்லரசம்பட்டி முதல் கனிராவுத்தர் குளம் வரை போதை கலாச்சாரத்துக்கு எதிரான " தமிழக வணிகர் வணிகர் ஒற்றுமை தொடர் ஓட்டம்" என்ற தலைப்பில் மராத்தான் போட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கான முன்பதிவு https://sportswander.com/event/90 என்ற இணையதளம் வழியே நடைபெறுகிறது. பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (ஜூன்.6) முதல் முன்பதிவை மாநிலத் தலைவர் பதிவு செய்து தொடங்கி வைத்தார். இப்போட்டியானது, ஐந்து கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என்று இரு பிரிவில் இருபாலர்களுக்கும் தனித்தனியே பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிக்கான மொத்த பரிசு தொகை 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் தலைமையில் மாவட்ட இளைஞரணியினர் செய்து வருகின்றனர். மேலும், இப்போட்டி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 97912 34720, 90806 00335 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News