அந்தியூர் அருகே டிராக்டர் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு
அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே டிராக்டர் தொழிலாளி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள தேவர்மலை பாறையூரை சேர்ந்தவர் சிக்கண்ணன் மகன் நாகன் என்கிற சின்னராஜ் (வயது 32). இவர் டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுதாமணி. சின்னராஜ் காலையில் வேலைக்கு சென்றால் இரவு நேரம் கடந்து வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு வேலைக்கு சென்ற சின்னராஜ் பின்னர், நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து, இன்று காலை சுதாமணி வேலைகளை முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது, அந்த வீட்டினுள் சின்னராஜ் விட்டத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
பின்பு, உறவினர்கள் உதவியுடன் சின்னராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, சுதாமணி அளித்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.