கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
Erode news- ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் இன்று (மே.24) வெள்ளிக்கிழமை காலை முதல் அனுமதிக்கப்பட்டனர்.
Erode news, Erode news today- பவானி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் இன்று (மே.24) வெள்ளிக்கிழமை காலை முதல் அனுமதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணையில் இருந்து அருவி போல் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காகவும், அதனை ரசிப்பதற்காகவும் உள்ளூா் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இதன் காரணமாக, நேற்று (வியாழக்கிழமை) கொடிவேரி தடுப்பணை மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர்.