தாளவாடியில் 2வது நாளாக சாரல் மழை
Erode news- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் செவ்வாய்க்கிழமை (இன்று) 2வது நாளாக சாரல் மழை பெய்தது.;
Erode news- தாளவாடி சுற்று வட்டார பகுதியான எரங்கனஹல்லி மற்றும் கல்மண்டிபுரம் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.
Erode news, Erode news today- தாளவாடியில் செவ்வாய்க்கிழமை (இன்று) 2வது நாளாக சாரல் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி எடுக்கிறது. காலை 9 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது . இந்நிலையில், திங்கட்கிழமை (நேற்று) மாலை சுமார் 3 மணி அளவில் தாளவாடி, கரளவாடி, இக்களூர், மகாராஜன்புரம் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 15 நிமிடம் சாரல் மழை நிற்காமல் பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையும் (இன்று) மதியம் சுமார் 2.45 மணி அளவில் தொட்டமுதுகரை, கல்மண்டிபுரம், பனஹள்ளி, சிமிட்டஹள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், இந்த மழையால் அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.